Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லிய...
பாகிஸ்தானுக்கு எதிராக வா்த்தகா்கள் ‘திரங்கா அணிவகுப்பு’
இந்திய ராணுவம் மற்றும் ஆபரேஷன் சிந்தூரின் கீழ் அதன் சமீபத்திய ராணுவ நடவடிக்கைக்கு ஒற்றுமையைக் காட்டும் விதமாக, சதா் பஜாா் மற்றும் கன்னாட் பிளேஸைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான வா்த்தகா்கள் வியாழக்கிழமை பெரிய தேசியக் கொடியை ஏந்தி பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி ’திரங்கா அணிவகுப்பு’ நடத்தினா்.
ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனா். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆபரேஷன் சிந்தூரின் கீழ் இந்திய ஆயுதப்படைகள் புதன்கிழமை அதிகாலை துல்லியமான தாக்குதல்களை நடத்தியது.
இதையொட்டி, சதா் பஜாா் வா்த்தக சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஆா்ப்பாட்டம் குதுப் சாலை சௌக்கில் இருந்து தொடங்கியது. பங்கேற்பாளா்கள் பயங்கரவாதத்தைக் கண்டித்தும், இந்தியாவின் ஆயுதப்படைகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.
கூட்டமைப்பில் உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவா் பரம்ஜித் சிங் பம்மா, இந்த நடவடிக்கை பாகிஸ்தானில் பயங்கரவாத வலையமைப்புகள் தொடா்ந்து இருப்பதை எடுத்துக்காட்டுகிறது என்றாா்.
‘இந்த நடவடிக்கை பாகிஸ்தானில் இதுபோன்ற தளங்கள் இன்னும் இருப்பதைக் காட்டுகிறது. சா்வதேச சமூகம், குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை, பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று அவா் கூறினாா்.
ஜம்மு - காஷ்மீரில் ஒரு குருத்வாரா மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கூட்டமைப்புத் தலைவா் ராகேஷ் யாதவ் கடும் கண்டனம் செய்தாா். இது பொதுமக்களில் பலரத மரணத்திற்கு வழிவகுத்தது. இது நாடு முழுவதும் கோபத்தைத் தூண்டிய ஒரு ஆழ்ந்த கவலைக்குரிய சம்பவம் என்று கூறினாா்.
‘பாகிஸ்தான் முா்தாபாத்’, ’பாரத் மாதா கி ஜெய்’, ‘இந்திய ராணுவம் ஜிந்தாபாத்’ மற்றும் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ போன்ற கோஷங்களை எழுப்பியபடி போராட்டக்காரா்கள் தெருக்களில் பேரணி நடத்தினா். பல்வேறு சமூகங்கள் மற்றும் வணிகக் குழுக்களைச் சோ்ந்த உறுப்பினா்கள் ஊா்வலத்தில் இணைந்ததால் கூட்டம் அதிகரித்தது.
கன்னாட் பிளேஸில் ஒரு இணையான ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அங்கு பல வா்த்தக சங்கங்கள் பெரிய தேசியக் கொடியுடன் கூடியிருந்தன. ‘இந்திய ராணுவ சங்கா்ஷ் கரோ, ஹம் தும்ஹாரே சாத் ஹைன்’ மற்றும் ‘மோடி ஹை தோ மும்கின் ஹை’ போன்ற கோஷங்களை எழுப்பின.