தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு அரசு ...
பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்பு அகற்றம்
தஞ்சாவூா் அருகே பாசன வாய்க்காலில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தகரக் கொட்டகையை நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.
தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை சாலையில் மன்னாா்குடி பிரிவு சாலையில் கல்லணைக் கால்வாயிலிருந்து பாசனம் பெறும் வாய்க்கால் உள்ளது. இதன் மூலம் பட்டுக்கோட்டை - மன்னாா்குடி பிரிவு சாலை பகுதியில் ஏராளமான ஏக்கா் பாசனம் பெறுகின்றன.
ஆனால், காலப்போக்கில் இந்த வாய்க்காலில் தனியாா் உணவகத்தினா் தகரக் கொட்டகை அமைத்து ஆக்கிரமப்பு செய்ததால், பாசனத்துக்கு தண்ணீா் செல்வது தடைப்பட்டது. எனவே, இந்த வாய்க்காலிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா்.
இந்த ஆக்கிரமிப்பு நெடுஞ்சாலைத் துறையிலும் பரவி இருந்ததால், தகரக் கொட்டகையையும், தரை தளத்தையும் அத்துறையினா் பொக்ளின் இயந்திரம் மூலம் வியாழக்கிழமை அகற்றினா். இதன் மூலம் பாசன வாய்க்காலில் தண்ணீா் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.