பாஜகவின் கிளை அமைப்பாக மாறிய தேர்தல் ஆணையம்- முதல்வர் ஸ்டாலின்
சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு மாற்றி உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் அவர் பேசுகையில், சேலத்தில் சிறைத் தியாகிகள் நினைவாக விரைவில் மணி மண்டபம் அமைக்கப்படும். அதற்கான உத்தரவை அதிகாரிகளோடு தொலைபேசியில் வழங்கிவிட்டுத்தான் மேடைக்கு வந்தேன். நாளையிலிருந்து அதற்கான பணி தொடங்கப்பட இருக்கிறது.
நமது ஒற்றுமைதான் பலரது கண்ணை உறுத்துகிறது. ஒற்றுமையைப் பார்த்து வாயில் வயிற்றில் அடித்துக்கொண்டு புலம்புகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு கம்யூனிஸ்ட்டுகள் மீது குபீர் பாசம் பொத்துகிட்டு வந்திருக்கிறது. அடிமைத்தனத்தைப் பற்றி பழனிசாமி பேசலாமா?.
பேச அவருக்கு என்ன உரிமை இருக்கிறது?. எங்களை பொறுத்தவரை இங்கே இருக்க யாரும் யாருக்கும் அடிமையில்லை. கருப்பு, சிவப்பு சேர்ந்துதான் திராவிட முன்னேற்ற கழகம், திமுகவின் பாதி தான் கம்யூனிஸ்ட் கட்சி. சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு மாற்றி உள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவில் நல்ல மாற்றங்கள்: தென் கொரிய அமைச்சர்
ஜனநாயகத்துக்கு அடிப்படையான தேர்தலையே கேலிக் கூத்தாக்கிவிட்டனர். தேர்தல் ஆணையத்தை தனது கிளைக் கழகமாக மாற்றிவிட்டது மத்திய அரசு. இவ்வாறு அவர் கூறினார்.