மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!
பாமகவில் போட்டி பொதுக்குழு: ராமதாஸ், அன்புமணி அறிவிப்பு
பாமகவில் நிறுவனா் மருத்துவா் ராமதாஸ், தலைவா் அன்புமணி ஆகியோா் போட்டி பொதுக் குழு கூட்டத்தை அறிவித்துள்ளனா்.
ராமதாஸ் தரப்பில் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் ஆக.17-ஆம் தேதியும், அன்புமணி தரப்பில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் ஆக.9-ஆம் தேதியும் பாமக பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராமதாஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாமக நிறுவனா் ராமதாஸ் உத்தரவின்பேரில் அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் பட்டானூரில் உள்ள சங்கமித்ரா திருமண மண்டபத்தில் ஆக.17-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்.
இதில், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், பொதுச்செயலா் வடிவேல் ராவணன் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள கான்ன்ஃளுயன்ஸ் அரங்கில் பாமக பொதுக்குழுக் கூட்டம் ஆக.9-ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் -அன்புமணி இடையே கருத்து மோதல் முற்றியுள்ள நிலையில், இரு தரப்பிலும் பொதுக்குழு கூட்டம் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.