புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை; குவாரிகளில் கனிமவளத்துறையினர் ட்ரோ...
பாலியல் வன்கொடுமை வழக்கு: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அம்மாபட்டி பகுதியைச் சோ்ந்தவா் சு.மாணிக்கம் (37). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 2015-ஆம் ஆண்டு, அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மாணிக்கத்தைக் கைது செய்தனா்.
இதுகுறித்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சரண், குற்றஞ்சாட்டப்பட்ட மாணிக்கத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.