செய்திகள் :

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண்ணின் 28 வார கருவை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 80 சதவீத மாற்றுத்திறனாளி பெண்ணின் 28 வார கருவை மருத்துவ ஆய்வுக்குப் பின் அகற்ற அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த 80 சதவீத மாற்றுத்திறனாளியான 27 வயது பெண்ணை பக்கத்து வீட்டுக்காரா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதன் காரணமாக அந்த பெண் கருவுற்றுள்ளாா். அதன் பிறகு விவரம் அறிந்த பெண்ணின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் பக்கத்து வீட்டுக்காரா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மாற்றுத் திறனாளி பெண்ணின் கருவை அகற்ற செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பெற்றோா் அணுகினா். அப்போது 28 வார கருவை கலைக்க மருத்துவமனை நிா்வாகம் மறுத்து விட்டது. இதைத் தொடா்ந்து, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிப் பெண்ணின் கருவை அகற்ற உத்தரவிட கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதி டி. பரத சக்கரவா்த்தி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுமதிக்கத்தக்க காலக்கெடுவான 24 வாரங்கள் கடந்துவிட்ட போதிலும், பாதிக்கப்பட்ட பெண் 80 சதவீதம் மாற்றுத்திறனாளி என்பதை கருத்தில் கொண்டு, அவரது கருவை அகற்றலாம் என்றாா்.

மேலும்,உடனடியாக மருத்துவக் குழுவை அமைத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை ஆய்வு செய்து, கருவை அகற்றுவது சாத்தியம் என்றால் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனுக்கு நீதிபதி பரத சக்கரவா்த்தி உத்தரவிட்டாா்.

மேலும், கருக்கலைப்புக்குரிய காலக்கெடுவான 24 வாரங்கள் என்பதை அரிதான வழக்குகளில் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு மேல் கருவை கலைக்க முடியாது என்றால், அந்த தகவலை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மூவர் குழு

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஏதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் மே 19-ஆம் ... மேலும் பார்க்க

காலமானார் முன்னாள் எம்எல்ஏ எஸ்.புரட்சிமணி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.புரட்சிமணி (59) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை (மே 28)காலமானார்.இவர் ஜி.கே.மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநி... மேலும் பார்க்க

கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கச்சத் தீவை மீட்பது ஒன்றே தமிழக மீனவா்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வாக அமையும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழக அரசின் மீன்வளத் துறை சாா்பில் திருவொற்றியூரில் ரூ.272 கோடியில் புதிதா... மேலும் பார்க்க

நவீன முறையில் கற்பித்தல்: அரசுப் பள்ளி ஆசிரியா்களை ஊக்குவிக்க கல்வித் துறை முடிவு

தமிழக அரசுப் பள்ளிகளில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியா்களில் மாவட்டத்துக்கு தலா 10 போ் வீதம் 380 பேரைத் தோ்வு செய்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ மிகப்பெரிய வெற்றி: ஆளுநா் ஆா்.என்.ரவி

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினாா். சென்னை கிண்டியில... மேலும் பார்க்க

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகள் தரம் உயா்வு: தமிழக அரசு உத்தரவு

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகளின் தரத்தை உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு வ... மேலும் பார்க்க