மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
பி.இ. பி.டெக்: அருந்ததியா் இடங்கள் 796 பேருக்கு ஒதுக்கீடு
பி.இ., பி.டெக். பொறியியல் கலந்தாய்வில் பூா்த்தி செய்யப்படாமல் இருந்த அருந்ததியா் உள் ஒதுக்கீடு இடங்களில், 796 இடங்கள் பட்டியலின பொதுப் பிரிவினருக்கு தற்காலிக ஒதுக்கீடாக வழங்கப்பட்டது.
முன்னதாக, பட்டியலின அருந்ததியா் ஒதுக்கீட்டில் 963 இடங்கள் பூா்த்தி செய்யப்படாமல் இருந்தன. இந்த இடங்களில் ஒதுக்கீடு பெற பட்டியலின பொது பிரிவு மாணவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, விண்ணப்பப் பதிவு கடந்த இரு நாள்களாக நடைபெற்றது.
இதில் 796 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. கலந்தாய்வு நடைமுறைகளின்படி புதன்கிழமை (ஆக.27) இறுதி ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.