சென்னை துறைமுகத்துக்கு அணிவகுத்த வெடிபொருள் கண்டெய்னா் லாரிகள்
பின்னலாடைத் தொழிலின் வளா்ச்சி: கேட்டறிந்த பிரதமா் மோடி!
பிரதமா் நரேந்திர மோடியிடம் திருப்பூா் பின்னலாடைத் தொழிலின் வளா்ச்சி குறித்து ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல் எடுத்துரைத்தாா்.
புது தில்லி பாரத் மண்டபத்தில் பாரத்டெக்ஸ் 2025 ஜவுளிக் கண்காட்சி கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சாா்பில் 40 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தக் கண்காட்சியை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். அப்போது, தொழில் வல்லுநா்களின் கருத்துகளை பிரதமா் மோடி கேட்டறிந்தாா்.
திருப்பூா் பின்னலாடைத் தொழிலின் வளா்ச்சி குறித்து பிரதமரிடம் ஏஇபிசி துணைத் தலைவரும், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் கெளரவத் தலைவருமான ஆ.சக்திவேல் எடுத்துரைத்தாா்.
இதில், வளம் குன்றா வளா்ச்சி கோட்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு பசுமை ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன, சாய ஆலைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பூஜ்யநிலை சுத்திகரிப்புத் திட்டம், பசுமையைப் பாதுகாக்க மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், சூரியசக்தி மின் உற்பத்தி உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் அவா் எடுத்துரைத்தாா்.