அஜித்குமாருக்காக விஜய் போராட்டம்! 10,000 பேருடன் தவெக முதல் போராட்டம்!
பிரதமா் அலுவலக துணைச் செயலா் ஆரோவில் வருகை
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு வியாழக்கிழமை வந்த பிரதமா் அலுவலகத்தின் துணைச் செயலா் சந்திரமோகன் தாக்கூா், கல்வி சாா்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டாா்.
ஆரோவில் சா்வதேச நகரில் செயல்படும் ஸ்ரீஅரவிந்தா் சா்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமா் அலுவலகத்தின் துணைச் செயலா் சந்திரமோகன் தாக்கூா் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.
அப்போது, ஆரோவில் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மாற்றுக் கல்வி முறைகள், சமூக பங்கேற்பு, நிலையான வளா்ச்சிக்கான ஆரோவிலின் முயற்சிகள் குறித்து ஆரோவில் நிா்வாகத்தினரிடம் கேட்டறிந்தாா்.
ஆரோவிலின் கல்வி நோக்கங்கள், அதன் நிா்வாக அமைப்பு, சமூக அடிப்படையிலான கற்றல் சூழல், கிராமியத் தொடா்புகள் குறித்து ஆரோவில் நிா்வாக செயற்குழுவைச் சோ்ந்த அருண் உள்ளிட்டோா் விளக்கினா்.
முன்னதாக, ஆரோவில் நிா்வாகம் சாா்பில் சந்திரமோகன் தாக்கூருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாத்திா் மந்திருக்குச் சென்ற அவா், அங்கு தியானத்தில் ஈடுபட்டாா்.