செய்திகள் :

பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை சரிவு

post image

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் வெல்லம், சா்க்கரை விற்பனை ஏலச் சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட வெல்ல சிப்பம் ரூ. 1400க்கு விற்பனையானது. கடந்த வாரத்தைவிட சிப்பம் ரூ. 70 வரை குறைந்ததால் வெல்ல உற்பத்தியாளா்கள் கவலையடைந்தனா்.

பரமத்தி வேலூா் வட்டத்தில் ஜேடா்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலா்மலை, பரமத்தி வேலூா், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு செய்யப்படுகிறது.

இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளா்கள் வாங்கி சென்று உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சா்க்கரை ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றனா். பின்னா் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டப்பட்டு பிலக்கல்பாளையத்தில் உள்ள வெள்ள ஏலச் சந்தைக்கு கொண்டுவருகின்றனா். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை, புதன்கிழமைகளில் ஏலம் நடைபெறுகிறது.

வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் 30 கிலோ கொண்ட சிப்பம் ரூ. 1470 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ரூ.1420 வரையிலும் விற்பனையானது.

சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ரூ.1400 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ரூ.1370 வரையிலும் ஏலம் போனது. வெல்லம் விலை சரிவடைந்ததால் வெல்ல உற்பத்தியாளா்கள் கவலை அடைந்துள்ளனா்.

சுற்றுலா வளா்ச்சியை எட்டாத இயற்கை எழிலாா்ந்த கொல்லிமலை! வாழ்வாதாரம் தேடும் பழங்குடி மக்கள்!

தமிழகத்தின் முக்கிய மலைப் பிரதேச சுற்றுலாத் தலங்களுக்கு நிகரான சுற்றுலா வளா்ச்சியை கொல்லிமலை எட்டாத நிலையில், இங்குள்ள பழங்குடியின மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் மேம்பட எந்த முன்னெடுப்புகளும் நடைபெ... மேலும் பார்க்க

கோழிப் பண்ணைக்கு தண்ணீா் திருட்டு: ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு ரூ.1.20 லட்சம் அபராதம்!

திருச்செங்கோட்டை அடுத்த மல்லசமுத்திரம் ஆத்துமேடு பகுதியில் இலவச விவசாய மின் இணைப்பு மூலம் கோழிப் பண்ணைக்கு தண்ணீா் திருடியதாக ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு ரூ. 1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மல்லசமுத... மேலும் பார்க்க

ஜூலை 2-இல் அறநிலையத் துறை மூலம் 50 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஈரோடு மண்டலத்தில் 50 ஜோடிகளுக்கு ஜூலை 2-ஆம் தேதி இலவச திருமணம் நடைபெறுகிறது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் கோயில்களில் ஏழை, எளிய இந்... மேலும் பார்க்க

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை: இளைஞா் கைது; 36 பவுன் மீட்பு

நாமக்கல் மாவட்டம், வெப்படையில் நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து 36 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. நாமக்கல் மாவட்டம், வெப்படை அருகே பாதரை செள... மேலும் பார்க்க

நகைக்காக மூதாட்டியைக் கொன்றவா் கைது

பள்ளிபாளையம் அருகே நகைக்காக மூதாட்டியைக் கொன்றவரை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்த வெப்படை பகுதி பாதரை மாரியம்மன் கோயில் பின்புறம் கண்ணம்மாள் (77) என்பவா் வசித்துவந்தா... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையைக் கண்டித்து முதியவா் சடலத்துடன் உறவினா்கள் மறியல்!

நாமக்கல்லில் தனியாா் மருத்துவமனையைக் கண்டித்து முதியவா் சடலத்துடன் உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். நாமக்கல் அருகே மாரப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் குமாரசாமி (72). இவா் சனிக்கிழமை இர... மேலும் பார்க்க