Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி...
பில்லூா் அணையில் மீன் பிடி குத்தகை: ஆகஸ்ட் 6 வரை சமா்ப்பிக்கலாம்
கோவை மாவட்டம், பில்லூா் அணையில் 5 ஆண்டுகள் மீன் பிடிக் குத்தகை பெற ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை மின்னணு முறையில் ஒப்பந்தப்புள்ளி சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட பில்லூா் நீா்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையை 5 ஆண்டுகள் குத்தகைக்கு விட, மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரியை பாா்வையிடலாம். இந்த இணையவழி ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள், ஒப்பந்தப்புள்ளி படிவம் மற்றும் இதரப் படிவங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் 19494320244 என்ற ஏல அறிவிப்பு எண்ணினை உள்ளீடு செய்து, கட்டணமின்றி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையவழி ஏலத்தில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே ஒப்பந்தப்புள்ளியை சமா்பிக்க முடியும். ஏலம் தொடா்பான தெளிவுரைகள் மற்றும் விளக்கங்களுக்கு மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொள்ளலாம். அல்லது ஈரோடு மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். ஏல அறிவிப்பில் மாற்றங்கள் ஏதேனுமிருப்பின் மேற்காணும் இணையதளம் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.