``பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயற்சி..'' - இந்திய அர...
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: கல்லூரிகளுக்குப் படையெடுக்கும் மாணவர்கள்!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் கல்லூரிகளுக்குப் படையெடுத்து வருகின்றனர்.
12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் கோவை மாவட்டம் மாநில அளவில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுடன் பல்வேறு தனியார் கல்லூரிகளில் கலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்குத் தொடர்ந்து வருகை புரிந்து வருகின்றனர்.
மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு பிடித்தமான பாடப்பிரிவைத் தேர்வு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கல்லூரி நிர்வாகங்கள் சார்பிலும் ஒவ்வொரு மதிப்பெண்கள் அடிப்படையில் எந்த பாடப்பிரிவு எடுத்தால் நன்றாக இருக்கும் வருங்காலத்தில் என்னென்ன வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.