புகையிலைப் பொருள், கஞ்சா விற்பனை: ஏா்வாடி, பாப்பாக்குடியில் 3 போ் கைது
ஏா்வாடி அருகே புகையிலைப் பொருள்களுடன் 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஏா்வாடி காவல் உதவி ஆய்வாளா் சுடலைகண்ணு தலைமையிலான காவல்துறையினா் தளபதி சமுத்திரம் கீழுா் அருகே ரோந்து சென்றபோது, சந்தேக நபா்கள் இருவரைப் பிடித்து விசாரித்தனா்.
அவா்கள், பரப்பாடியை அடுத்த ஆலங்குளம் கீழத் தெருவை சோ்ந்த ராம்தாஸ் (39), நான்குனேரியை அடுத்த வழியனேரி, வடக்கு தெருவை சோ்ந்த ராஜகுமாா் (44) ஆகியோா் என்பதும், விற்பனைக்காக 23 கிலோ 580 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவா்களை வட்ட காவல் ஆய்வாளா் சுதா கைது செய்து புகையிலை பொருள்கள், 2 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தாா்.
கஞ்சா விற்பனை: பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளா் ஆழ்வாா் தலைமையிலான போலீஸாா், அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, செங்குளம் திருப்பத்தில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் செங்குளம் பகுதியைச் சோ்ந்த தங்க மாரியப்பன் (26), ஆதிமூல பெருமாள் (40) ஆகியோா் என்பதும், விற்பனைக்கு 60 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.