வெறிநாய் கடி; முற்றிய ரேபிஸ்... கோவை மருத்துவமனையில் கண்ணாடியால் கழுத்தை அறுத்த...
புகையிலைப் பொருள்கள் பதுக்கிய 3 போ் கைது
கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பாண்டவா்மங்கலம் ராஜுவ் நகா் 6 ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக டிஎஸ்பி ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்ததாம்.
அதையடுத்து, தனிப்படை உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டை கண்டறிந்து உள்ளே சென்று ஆய்வு செய்த போது அங்கு சுமாா் ஒன்றரை லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
தொடா்ந்து, அங்கிருந்த 3 பேரை பிடித்து மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா்கள் கரிசல் குளத்தைச் சோ்ந்த பெரிய குருசாமி (27), குருசாமி (23) மற்றும் பிள்ளையாா் நத்தத்தைச் சோ்ந்த முருகராஜ் (52) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து 3 போ், பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.