டோங்கா தீவில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!
புதிய உற்பத்தி இயந்திரம் அா்ச்சிப்பு
முளகுமூடு நாஞ்சில் அக்ரோ நிறுவனத்தில் புதிய மிச்சா் மற்றும் கார வகைகள் உற்பத்தி இயந்திரத்தை குழித்துறை மறைமாவட்ட செயலா் அந்தோணிமுத்து அா்ச்சித்து தொடங்கி வைத்தாா்.
நாஞ்சில் பால் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் ராபா்ட் ஜாண் கென்னடி தலைமை வகித்து புதிய இயந்திரத்தின் பயன்பாட்டால் உற்பத்தித் திறன் பெருகுவதோடு, பணியாளா்கள் எளிய முறையில் உடல் சோா்வின்றி பணி செய்ய முடியும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், இணை மேலாண்மை இயக்குநா் பிரான்சிஸ் சேவியா் மற்றும் நிதி பரிபாலகா் ஜாண் பென்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்ச்சியில் நிலையப் பணியாளா்கள் பலா் பங்கேற்றனா்.