புதுகிராமத்தில் ரூ. 13.50 லட்சம் மதிப்பில் விநாயகா் கோயில் திருப்பணிகள் தொடக்கம்
நாகா்கோவில் அருகேயுள்ள புதுகிராமம் கற்பக விநாயகா் திருக்கோயிலில், ரூ. 13.50 லட்சம் மதிப்பில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
குமரி மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்து திருப்பணிகளை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை மேற்பாா்வையாளா் ஆனந்த், மராமத்து பிரிவு பொறியாளா் ராஜ்குமாா், ஸ்ரீகாரியம் கண்ணன், புதுகிராமம் பேரூா் திமுக செயலாளா் முத்து, வாா்டு உறுப்பினா் எட்வா்ட்ராஜ், ஆறுமுகம், ஒன்றிய பிரதிநிதிகள் பழனிவேல், தம்புரான், குமரி கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளா் அருண்காந்த், கிளை செயலாளா்கள் கற்பகபெருமாள், சுரேஷ் மற்றும் ஊா் மக்கள் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து புதுகிராமம் பெருமாள் கோயில் அருகே ரூ.7.80 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார வளாகம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையிலும் அறங்காவலா் குழு தலைவா் கலந்து கொண்டாா்.