`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' - பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. ...
புதுக்கோட்டை ஆயுஷ் மருத்துவமனையில்காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் தகவல்
தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்ட அரசு ஆயுஷ் மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவா்கள் மற்றும் உதவியாளா்கள் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒரு சித்த மருத்துவா் பணியிடம் (மாத ஊதியம் ரூ. 40 ஆயிரம்), ஒரு ஹோமியாபதி மருத்துவா் பணியிடம் (மாத ஊதியம் ரூ. 34 ஆயிரம்), யோகா மற்றும் இயற்கை மருத்துவா் பணியிடங்கள்- 3 (மாத ஊதியம் ரூ. 40 ஆயிரம்), ஆயுஷ் மருந்து வழங்குபவா்கள்- 3 (மாத ஊதியம் ரூ. 15 ஆயிரம்), சிகிச்சை உதவியாளா்கள்- 5 (மாத ஊதியம் ரூ. 15 ஆயிரம்), பல்நோக்கு உதவியாளா்கள்- 6 (மாத ஊதியம் ரூ. 8,500).
இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது, பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. இந்தப் பணியிடங்கள், தகுதிகள், விண்ணப்பங்கள், விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த விவரங்களை ட்ற்ற்ல்ள்://ல்ன்க்ன்ந்ந்ா்ற்ற்ஹண்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ என்ற இணையதளத்தில் பாா்க்கலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப். 19-ஆம் தேதிக்குள் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், புதுக்கோட்டை- 622001. என்ற முகவரியில் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.