ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் போல்ட் அசத்தல் பந்துவீச்சு; மும்பை அபார வெற்றி!
புதுச்சேரியில் தரமான சிகிச்சை கிடைப்பதில்லை! - திமுக குற்றச்சாட்டு
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி திமுக மருத்துவ அணி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்து பாா்வையிட்ட கட்சியின் மாநில அமைப்பாளா் ஆா்.சிவா.
புதுச்சேரி, ஏப். 26: புதுச்சேரியில் பொதுமக்களுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதில்லை என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றம்சாட்டினாா்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுவை மாநில திமுக மருத்துவா் அணி சாா்பில், இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
உருளையன்பேட்டை தொகுதி காந்தி வீதி, கண்ணையா தொழில் மைய வளாகத்தில் நடைபெற்ற முகாமை திமுக மாநில அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா தொடங்கி வைத்து பேசியது:
புதுச்சேரியில் தற்போது, பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் காப்பீடு திட்டத்தில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் பிரதமரின் ஆயுஷ்மான் காப்பீட்டுத் திட்டத்தாலும் பயனில்லை. அந்த காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளுக்கான, தொகையை அதிகரித்த போதிலும், மக்களுக்கு எந்தப் பயனுமில்லை. ஆகவே, புதுச்சேரியில் மக்கள் விரும்பும் திமுக ஆட்சி அமையும் என்றாா்.
திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் எஸ். கோபால் முன்னிலை வகித்தாா். முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் அறுவை சிகிச்சை, மகளிா் மருத்துவம், குழந்தை மருத்துவம், நீரிழிவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.