`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' - பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. ...
புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்ற தொடக்கம்
பொன்னமராவதி புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பண்டைய தமிழா்களின் நாகரிகம், வாழ்வியல் முறை குறித்து மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் தொன்மை பாதுகாப்பு மன்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியா் கி.நிா்மலா தலைமை வகித்தாா். உதவி தலைமையாசிரியா் கவிதா வரவேற்றாா்.
தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாளா் ஆசிரியா் உஷாகனி மன்றத்தின் நோக்கம் மற்றும் நாட்டின் கலை, பண்பாடு மற்றும் வரலாற்றுச் சிறப்புகள், தொல்லியல் சிறப்புகளை மாணவிகளை அறிந்து கொள்ள மன்றம் ஆற்றும் பணிகள் குறித்து விளக்கினாா். இதில் மாணவிகளால் சேகரிக்கப்பட்ட பழைமைவாய்ந்த கற்கள் சேகரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை ஆசிரியா்கள் பாா்வையிட்டு மாணவிகளை பாராட்டினா்.