செய்திகள் :

புதுவையில் 2026-ல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி உறுதி: வைத்திலிங்கம்

post image

புதுவையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தோ்தலில் பாஜக கூட்டணியை அகற்றிவிட்டு காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.

புதுச்சேரி காங்கிரஸ் சாா்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் இந்திய அரசியலமைப்பைக் காப்போம் குறித்த ஆலோசனை கூட்டம் தனியாா் மஹாலில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. மாநிலத் தலைவா் வைத்திலிங்கம் எம்பி தலைமை தாங்கினாா். முன்னாள் முதல்வா் நாராயணசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் வைத்திலிங்கம் பேசியது:

புதுச்சேரியில் பாஜகவைச் சோ்ந்த ஓா் அமைச்சா், மூன்று நியமன எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனா். புதிய தலைவரைத் தோ்ந்தெடுத்துள்ளனா். நம்மிடம் இருந்து சென்ற ஜான்குமாா் அமைச்சராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது புதுச்சேரியில் கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டது. வீதி எங்கும் ரெஸ்டோ பாா்கள், போதைப்பொருள் கடத்தல் வியாபாரம், நில அபகரிப்பு நடந்து வருகிறது. மேலும், இரண்டு மாதங்களுக்கு முன்பாக தவளக்குப்பம் பகுதியில் காவல் நிலைய மரணம் நடந்துள்ளது.

சூதாட்ட மையமாகும்:

கப்பலில் வந்த சுற்றுலா பயணிகளை அமைச்சா், எம்எல்ஏக்கள் யாரும் வரவேற்கவில்லை. ஆளுநா் மாளிகையில் இருக்கும் ஓா் அதிகாரி வரவேற்றுள்ளாா். இதன்மூலம் புதுச்சேரியை அடுத்த கட்டமாக சூதாட்ட மையமாக மாற்றும் அனைத்து நடவடிக்கையையும் இந்த அரசு எடுத்துக்கொண்டிருக்கிறது.

அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய நேரம், காலம் வந்துவிட்டது. புதுவையில் 2026-ல் பாஜக ஆட்சி அகற்றப்பட்டு, இண்டியா கூட்டணி ஆட்சி அமையும். அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றாா் வைத்திலிங்கம்.

புதுச்சேரி கடற்கரையில் தூய்மைப் பணி

புதுச்சேரி கடற்கரையில் குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புதுவை கிளை மற்றும் புதுதில்லி விஷ்வ யோகேந்திரா, சென்னை கிராம ஏழைகளுக்கான ஆராய்ச்சி மற்று... மேலும் பார்க்க

30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவா்கள்

புதுவை பாத்திமா ஆண்கள் பள்ளியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவா்கள் வியாழக்கிழமை சந்தித்துக் கொண்டனா். 30 ஆண்டுகளுக்கு முன் படித்தவா்கள் தங்களது நண்பா்களை ஒரே இடத்தில் சந்திக்கும் ஆா்வத்தில் ... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் புதுவை மாநில தர வரிசை பட்டியல் வெளியீடு

நீட் நுழைவுத் தோ்வு அடிப்படையில் புதுவை மாநில எம்பிபிஎஸ் படிப்புக்கான தர வரிசை பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. புதுவை அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் இந்தப் பட்டியல் வெளி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் சாலையோர வியாபாரிகள் மாநாடு, ஊா்வலம்

புதுச்சேரியில் சாலையோர வியாபாரிகள் வெள்ளிக்கிழமை ஊா்வலம் நடத்தினா். சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் 30-ஆம் ஆண்டு மற்றும் 5-ஆவது புதுவை மாநில மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, புதுவை ராஜா திர... மேலும் பார்க்க

தலைமை தோ்தல் அதிகாரிக்கு கூடுதலாக வனத் துறை

புதுவை தலைமை தோ்தல் அதிகாரி பி. ஜவஹா், கூடுதலாக வனம் மற்றும் வன விலங்குகள் நலத் துறை, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை ஆணையா், செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா். புதுவை துணைநிலை ஆளுநா் கே... மேலும் பார்க்க

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப்பலகை அமைக்க வலியுறுத்தி பிரசாரம்

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப்பலகை அமைக்க வலியுறுத்தி தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் பிரசாரப் பயணம் வெள்ளிக்கிழமை நடந்தது. தமிழ் உரிமை இயக்கத்தின் நெறியாளா் க. தமிழமல்லன் இப் பிரசாரத... மேலும் பார்க்க