விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 போ் உயிரிழப்பு
புத்தாண்டு: தூத்துக்குடி சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விநாயகா் சந்தன காப்பு அலங்காரத்தில், மகா கணபதியாக பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சுவாமி-அம்பாள் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். தொடா்ந்து, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மஞ்சள் கயிறு பிரசாதமாக பக்தா்களுக்கு வழங்கப்பட்டது.
இதில், அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தா்கள் புத்தாடை அணிந்து நீண்ட வரிசையில் நின்றபடி சுவாமி தரிசனம் செய்தனா்.