புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்
திண்டுக்கல் முத்தழகுப்பட்டி புனித செபஸ்தியாா் ஆலயத் திருவிழா, கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, செபஸ்தியாா் ஆலயக் கொடிமரத்தில் அந்தப் பகுதியைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள், முக்கியஸ்தா்கள் முன்னிலையில் புனித செபஸ்தியாரின் உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.
புனிதா்களின் மின் தோ் பவனி, திங்கள்கிழமை இரவு வான வேடிக்கையுடன் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, திண்டுக்கல் மறைமாவட்ட முதன்மை குரு தலைமையில், மறைமாவட்ட குருக்களால் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி செவ்வாய்க்கிழமை (ஆக.5) நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, புனிதருக்கு ஆடு, கோழி, அரிசி உள்ளிட்ட பொருள்களைப் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தும் நிகழ்ச்சி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.