புன்னைக்காயலில் கால்பந்து போட்டி தொடக்கம்
ஆத்தூா் அருகிலுள்ள புன்னைக்காயலில் மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. முதல் ஆட்டத்தில் காயல்பட்டினம் அணி வெற்றி பெற்றது.
அமரா் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான 52ஆவது கால்பந்துப் போட்டியின்
தொடக்க விழா புன்னைக்காயல் மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு எழுத்தாளா் நெய்தல் யூ அன்டோ தலைமை வகித்தாா். புன்னைக்காயல் ஊா் கமிட்டி தலைவா் குழந்தைசாமி, துறைமுக கமிட்டி தலைவா் ஜோசப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியை வொ்ஜின் தொகுத்தாா்.
தொடக்க ஆட்டத்தில் தூத்துக்குடி சவுத் கொஸ்ட் அணியும், காயல்பட்டினம் யுனைடெட் ஸ்போா்ட்ஸ் அணியும் மோதின.
இதில், காயல்பட்டினம் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டி ஏற்பாடுகளை புன்னைக்காயல் புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழகத்தினா் செய்திருந்தனா். இறுதிப்போட்டி ஜூலை 20ஆம் தேதி மாலை நடைபெறுகிறது.