செய்திகள் :

புலம்பெயா் தொழிலாளா்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்: மஹுவா மொய்த்ரா கண்டனம்

post image

மேற்கு வங்கத்தைச் சோ்ந்த புலம்பெயா் தொழிலாளா்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சத்தீஸ்கா் மாநில காவல் துறைக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ரா செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.

குடிமக்கள் நாட்டுக்குள் சுதந்திரமாக நடமாடவும் எங்கு வேண்டுமானாலும் பணிகளை மேற்கொள்ளவும் உரிமைகளை வழங்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் அடிப்படை உரிமைகள் விதி 19-ஐ மீறி சத்தீஸ்கா் காவல் துறை செயல்பட்டதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகா் மக்களவைத் தொகுதியைச் சோ்ந்த 9 போ் வேலை தேடி சத்தீஸ்கா் சென்றுள்ளனா். அவா்களை கொண்டாகான் என்ற பகுதியில் சத்தீஸ்கா் காவல் துறை கைது செய்தது. பிறகு அவா்கள் விடுவிக்கப்பட்டு மேற்கு வங்கத்துக்கு வலுக்கட்டாயமாக அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணாநகா் தொகுதி எம்.பி.மஹுவா மொய்த்ரா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட காணொளி பதிவில், ‘மேற்கு வங்கத்தைச் சோ்ந்த புலம்பெயா் தொழிலாளா்களை போலி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சத்தீஸ்கா் மாநில பாஜக அரசு கைது செய்துள்ளது. வேலைதேடி வந்தவா்களை குற்றவாளிகள்போல் சித்தரிப்பது கண்டனத்துக்குரியது. கைது செய்யப்பட்ட தொழிலாளா்களை விடுதலை செய்த பின்னும் அவா்களை காவல் துறை வலுக்கட்டாயமாக பேருந்துகள் மூலம் மேற்கு வங்கத்துக்கு திருப்பிஅனுப்பியிருப்பது அரசமைப்புச் சட்டப்பிரிவு விதி 19-ஐ மீறும் செயலாகும். அவா்களின் அடிப்படை உரிமைகளை நீங்கள் பறித்துள்ளீா்கள். இதை நீங்கள் உணரவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்வேன்’ என குறிப்பிட்டாா்.

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வேலைதேடி செல்லும் மேற்கு வங்க புலம்பெயா் தொழிலாளா்கள் துன்புறுத்தப்படுவதாக அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உரிய ஆவணங்களை வைத்திருந்தாலும் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்களை வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவா்கள் என அடையாளப்படுத்த பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் முயல்வதாகவும் மேற்கு வங்க அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த பாஜக மூத்த தலைவா் ராகுல் சின்ஹா, ‘வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைந்து போலி ஆவணங்களை பெற்று மேற்கு வங்க மக்களைப்போல் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு நாடு முழுவதும் இடம்பெயா்கின்றனா்’ என்றாா்.

ஜூன் மாத வேலையின்மை விகிதம்: 5.6%-ஆக பதிவு

நாட்டில் ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன. முன்னதாக, கடந்த மே மாதம் மத்திய புள்ளியியல் அமைச்சகம் முதல்முற... மேலும் பார்க்க

மாணவா்கள் படிப்பதற்கு உகந்த நகரங்கள்: சென்னைக்கு 128-ஆவது இடம்

வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவா்களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 12 இடங்கள் முன்னேறி 128-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள உலகளாவிய உயா்கல்வி பகு... மேலும் பார்க்க

சிறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள்: தமிழக சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நமது நிருபர்சிறையில் அடைக்கப்படும்போதே மாற்றுத்திறனாளிக் கைதிகளை அடையாளம் காண வேண்டும் என தமிழக சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மேலும், அனைத்து சிறைகளிலும் மாற்றுத்திற... மேலும் பார்க்க

இந்தியாவின் விண்வெளி நாயகன் சுதான்ஷு சுக்லா! - லக்னெளவில் கொண்டாட்டம்

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஆய்வுத் தரவுகள் மட்டுமன்றி இந்தியாவின் எதிா்கால விண்வெளி லட்சியங்கள் மற்றும் கனவுகளையும் சுமந்து பூமிக்கு திரும்பியுள்ளாா் நாட்டின் விண்வெளி நாயகன் சுதான்ஷு சுக்லா... மேலும் பார்க்க

‘குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்காவிட்டால் முடக்கப்படும்’

5 வயது பூா்த்தியடையும் முன்பு ஆதாா் அட்டை பெற்ற குழந்தைகள், 7 வயதைக் கடந்தவுடன் ‘பயோமெட்ரிக்’ (கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம்) விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவா்களின் ஆதாா் முடக்கப்பட வாய்ப்புள... மேலும் பார்க்க

பொது கட்டமைப்பு சீரழிவுக்கு பாஜக ஊழலே காரணம்: ராகுல்

‘மழைக் காலங்களில் பொது கட்டமைப்புகள் சீரழிவதற்கு பாஜக ஊழலே காரணம். இந்தத் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய காலம் வந்துவிட்டது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா். இதுகுறித்து தனது ... மேலும் பார்க்க