புல்வாமா தாக்குதலில் உயிா்நீத்த ராணுவ வீரா்களுக்கு மரியாதை
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களின் உருவப் படங்களுக்கு கமுதி சேது சீமை பட்டாளம் ராணுவ வீரா்கள் நலச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
கடந்த 2019-ஆம் ஆண்டு புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த 40 ராணுவ வீரா்களின் படங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம், கமுதி சேது சீமை பட்டாளம் ராணுவ வீரா்கள் நலச் சங்கத்தினா் மலா்த்துவி மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில் சங்க கமுதி வட்டார உறுப்பினா்கள், முன்னாள், இந்நாள் ராணுவ வீரா்கள் கலந்து கொண்டனா்.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களைக் கெளரவிக்கும் வகையில், பிப்.14-ஆம் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு ராணுவ வீரா்கள் நலச் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.