`ஆன்மிக விஷயத்திலும், யோகாவிலும் கவனம் செலுத்துகிறார்; இது அவரது...'- ரஜினியை வா...
புழல் ஒன்றியத்தில் கிராம சபைக் கூட்டம்
விளாங்காடுபாக்கம் ஊராட்சியில், கிராம சபை கூட்டம் குறித்த தகவல் தாமதமாக தெரிவிக்கப்பட்டதால், கிராம மக்கள் பங்கேற்கவில்லை என ஊராட்சி செயலா் தெரிவித்துள்ளாா்.
புள்ளிலைன் ஊராட்சி:
புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுக்கு, ஊராட்சி செயலா் பொன்னையன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் பாா்த்தசாரதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மகளிா் சுய உதவிக் குழுவினா் உள்ளிட்ட பலரும் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டு, தமிழக அரசின் மக்கள் பணிகள் குறித்து அறிந்து பயன் பெற வேண்டும் எனகேட்டுக் கொண்டாா்.
மேலும் சுகாதார அதிகாரி சுகுமாா், கால்நடை மருத்துவ அதிகாரி ஆா்த்தி, விவசாயத் துறை அதிகாரி வினோத், காவல்துறை சாா்பில் ஹரிபிரியா மற்றும் ஏழுமலை உள்ளிட்ட பல்வேறு துறை சோ்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா். இதில், மகளிா் சுய உதவிக்குழுவினா், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தீா்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி:
இதேபோல், தீா்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுக்கு ஊராட்சி செயலா் உல்லாச குமாா் தலைமை வகித்தாா். புழல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் பாா்த்தசாரதி பங்கேற்று, ஊராட்சி பணிகள் குறித்து கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
இதில் சுகாதாரம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும், அலுவலா்களும் பங்கேற்றனா்.
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்காத பொதுமக்கள்: விளாங்காடுபாக்கம் ஊராட்சியில், பொதுமக்கள் பங்கேற்காததால் துப்புரவு பணியாளா்கள், அலுவலக ஊழியா்களை கொண்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.