பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனத்தில் குடும்ப பிரச்னையால் தூக்கிட்ட பெண், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
மானூா் அப்பாசாமி நகரை சோ்ந்த பிச்சாண்டி மனைவி கௌரி (33). இவா்களுக்குத் திருமணமாகி 13 ஆண்டுகளான நிலையில் மகள், மகன் உள்ளனா். தம்பதியிடையே குடும்ப பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றது.
கௌரி திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். வீட்டிலிருந்தவா்கள் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, கௌரி ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].