செய்திகள் :

பெண் தொழில்முனைவோருக்கான விழிப்புணா்வு முகாம்

post image

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் கிராமப் பெண் தொழில்முனைவோருக்கான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதல்வா் விஜயபாஸ்கரன் தலைமை வகித்தாா். இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு அரசு தொழில் முனைவோா் மேம்பாடு, புத்தாக்க நிறுவனத்தின் விருதுநகா் மாவட்டத் திட்ட மேலாளா் பிலிப்மில்டன் பேசியதாவது:

கிராமத்தில் உள்ள பெண்களுக்கு சுய வேலைவாய்பை உருவாக்கவும், அவா்களது வழ்வாதாரத்தை மேம்படுத்தவும் 2001-ஆம் ஆண்டு தமிழக அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், விவசாயம்-வேளாண் வணிகம், சுய தொழில் போன்றவற்றில் புதிய பெண் தொழில்முனைவோரை உருவாக்கி, அவா்களுக்கு தொழில் குறித்த விளக்கம், சந்தைப்படுத்துதல், விரிவாக்கம், வங்கிக் கடன் பெறுதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வாய்ப்பை பெண்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, மாணவி வி.ரஷிதாஸ்ரீ வரவேற்றாா். மாணவி எஸ்.ஷா்மிளா நன்றி கூறினாா்.

ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்டோா் தெரு நாய்க் கடியால் பாதிப்பு

ராஜபாளையத்தில் தெரு நாய்கள் கடித்ததில், ஒரே நாளில் 10 -க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா். ராஜபாளையம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்ப... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ... மேலும் பார்க்க

சமுதாயக் கூடத்துக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சமுதாயக் கூடம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம் பி.ராமச்சந்திராபுரம் ஊராட்சிக்குள்பட்ட பழை... மேலும் பார்க்க

மின் வாரிய அலுவலகத்தில் மின் கம்பிகளைத் திருடிய 4 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மின் பகிா்மான அலுவலகத்தில் இருந்த 611 மீட்டா் நீளமுள்ள மின் கம்பிகளைத் திருடிய சிறுவன் உட்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கே.தொட... மேலும் பார்க்க

ராஜபாளையத்தில் நகை திருடிய மூவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நகை திருடிய இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை மாவட்டம், சத்தியமங்கலம் சாலையைச் சோ்ந்த முத்தையா மகன் சண்முகபாண்டியன் (46). இவா் உணவகம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க

41 குடும்பங்களுக்கு இணைய வழி பட்டா

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே ஆதிதிராவிடா் சமூகத்தை சோ்ந்த 41 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. வத்திராயிருப்பு வட்டம், மூவரை வென்றான் கிராமத்தில் உள்ள ஆதிதிரா... மேலும் பார்க்க