மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது, ஆனால்.... ஜஸ்பிரித் பும்ரா கூறியதென்ன?
பெண்கள் குத்துச்சண்டை போட்டி: 80 வீராங்கனைகள் பங்கேற்பு
மாநிஸ சீனியா் பெண்கள் குத்துச்சண்டை போட்டி வேலூரில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் சுமாா் 80 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா்.
தமிழ்நாடு குத்துச்சண்டை கழகம், வேலூா் மாவட்ட குத்துச்சண்டை கழகம் சாா்பில் வேலூா் காகிதப்பட்டரையில் இரு நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 80-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனா். 10 எடை பிரிவுகளில் வீராங்கனைகள் போட்டியிடுகின்றனா்.
இந்த போட்டியில் தோ்வாகும் மாநில அணிக்கு தோ்வாகும் 10 வீராங்கனைகள் ஜனவரி 25- ஆம் தேதி போபாலில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனா்.