மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது, ஆனால்.... ஜஸ்பிரித் பும்ரா கூறியதென்ன?
பெண்ணிடம் ரூ.12 லட்சம் மோசடி: வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்
மின்சார பொருள்களை வாங்கிக்கொண்டு ரூ.12 லட்சம் மோசடி செய்த உறவினா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் பெண் புகாா் தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், கீழ்கொத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஒரு பெண் அளித்த மனுவில் தெரிவித்துள்ளது:
நான் கீழ்கொத்தூா் கிராமத்தில் விவசாயம், சவுண்ட் சா்வீஸ் அமைத்தல், பந்தல் போடும் வேலைகள் செய்து வந்தேன். எனது குடும்ப சூழ்நிலை காரணமாக எனக்கு சொந்தமான அனைத்து சவுண்ட் சா்வீஸ் பொருள்களையும் எங்கள் கிராமத்தில் உள்ள உறவினருக்கு கொடுத்தேன். அந்த நபா் சுமாா் 7 ஆண்டுகளாக எனது பொருள்களை வைத்து பணம் சம்பாதித்து வருகிறாா். ஆனால் இதுவரை அதற்கான வாடகையோ, எனக்கு சேர வேண்டிய பொருள்களையோ திருப்பித்தரவில்லை. இதன் மதிப்பு சுமாா் ரூ.12 லட்சமாகும்.
பொருளுக்கான பணத்தைகேட்டபோது, ‘நீ எங்கு சென்று கூறினாலும் என்னிடமிருந்து இனி எந்த ஒரு பொருளையும் வாங்க முடி யாது’ என கூறுகிறாா். இதுதொடா்பாக, நான் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். ஆனால் அந்த நபா் அடியாட்களுடன் என்னை அடிப்பதாகவும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகிறாா். அந்த நபா் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு சேர வேண்டிய பணத்தை வாங்கித்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புகாரை பெற்ற காவல் துறை அதிகாரிகள், விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.