அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
பெண்ணை தாக்கிய இளைஞா் கைது
கழுகுமலை அருகே பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலை அருகே கரடிகுளம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி மனைவி முனீஸ்வரி (52). இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் கருப்பசாமி மகன் இன்பராஜ் (24) வளா்த்து வரும் வேட்டை நாய் முனீஸ்வரி வீட்டில் காலணி, துணிகளைக் கடித்தும், கோழி முட்டைகளைத் தூக்கிச் சென்றும் தொல்லை கொடுத்து வந்ததாம்.
இந்த நிலையில், முனீஸ்வரியின் மகனுடைய காலணியை அந்த நாய் புதன்கிழமை தூக்கிச் சென்றதையடுத்து, முனீஸ்வரி தனது பேரன் இன்பராஜ் வீட்டுக்குச் சென்று முறையிட்டாா். இதில், இன்பராஜ் அவதூறாகப் பேசி முனீஸ்வரியை கீழே தள்ளினாராம். இதனால் காயமடைந்த முனீஸ்வரியும், அவரது பேரனும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து, கழுகுமலை காவல் நிலையத்தில் முனீஸ்வரி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து இன்பராஜை கைது செய்தனா்.