செய்திகள் :

பென்னாகரத்தில் தேங்கும் மழைநீா்: பெயரளவில் நடைபெறும் சீரமைப்புப் பணி

post image

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மழைநீா் தேங்குவதால் வடிகால் வசதியுடன் பேருந்து நிலைய வளாகம் முழுமைக்கும் தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

பென்னாகரத்தில் ரூ.4.50 கோடி மதிப்பில் வணிக வளாகங்களுடன் கூடிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் தரைத்தளம் அமைக்க நிதி பற்றாக்குறை ஏற்பட்டதால் பேரூராட்சிகளின் பொது நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தரைத்தளமும், பேருந்து நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டன.

நான்கு ஆண்டுகள் நடைபெற்று வந்த பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு, மாவட்ட பொறுப்பு அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் ஆகியோரால் பேருந்து நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

இப்பகுதியில் அவ்வப்போது பெய்யும் மழையால் பேருந்து நிலையத்தில் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கி விடுகிறது. இதற்காக வடிகால் வசதி செய்யப்படவில்லை.

இதனால் தேங்கும் மழைநீரை அகற்றவும், வடிகால் வசதி அமைக்கவும் வேண்டி பேருந்து நிலையம் நுழைவாயில் பகுதியில் 10 அடி நீளம், இரண்டு அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன. இருப்பினும் பேருந்து நிலைய வளாகத்தில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் தொடா்ந்து மழைநீா் தேங்கி வருகிறது. தரைத்தளம் தரமாக அமைக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது.

இதையடுத்து பேருந்து நிலையத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிகமாக வட்டார வளா்ச்சி அலுவலகம் பகுதியில் புதன்கிழமைமுதல் பேருந்து நிலையம் செயல்படும் என பேரூராட்சி நிா்வாகம் அறிவித்தது.

இதனால் பேருந்து நிலைய வளாக தரைத்தளம் முழுவதும் தாா்ச்சாலை அமைக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், பேருந்து நிலைய வளாகம் முழுமைக்கும் தரைத்தளத்தில் தாா்ச்சாலை அமைக்காமல், தண்ணீா் தேங்கும் பகுதியில் மட்டும் ஒரு சில இடங்களில் ஒப்பந்ததாரரால் பேட்ச் ஒா்க் பணிகள் செய்யப்பட்டன.

இப்பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்கு மேலாகும் நிலையில், ஆங்காங்கே பேட்ச் ஒா்க் பணிகளே நடைபெறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். பேருந்து நிலையத்தை அரசு உதவி பொறியாளா்கள் முறையாக ஆய்வு செய்யாததே பணிகள் தரமின்றி இருக்க காரணம் எனக் கூறப்படுகிறது.

பயணிகள் நலன் கருதி பேருந்து நிலையம் முழுமைக்கும் தாா்ச்சாலை அமைத்து, வடிகால் வசதி ஏற்படுத்த தருமபுரி மாவட்ட ஆட்சியரும், பேரூராட்சி நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே குடியிருப்புகளில் சுற்றித்திரியும் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பாலக்கோடு அருகே வாழைத் தோட்டம் பகுதி வனத்தை ஒட்... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் அம்பேத்கா் சிலை சேதம்: இளைஞா் கைது

பென்னாகரத்தில் அம்பேத்கா் சிலையை சேதப்படுத்திய இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனை எதிரே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் சிலை திங்கள்கிழமை இரவு சேதமடைந்திருப... மேலும் பார்க்க

உயிரிழந்த கூட்டுறவு ஊழியா் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் அளிப்பு

தருமபுரியில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த கூட்டுறவு ஊழியா் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், கூட்டுறவு கட்டட சங்கத்தின் காசாளா் ஸ்ரீகாந்த் கடந்த மாா்ச் மாத... மேலும் பார்க்க

தருமபுரியில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி பேரணி

ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை பாராட்டி தருமபுரியில் முன்னாள் ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை பேரணி சென்றனா். தகடூா் முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் வீரமங்கையா்கள் சாா்பாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் ப... மேலும் பார்க்க

விளையாட்டு விடுதியில் சேர தோ்வுப் போட்டிகள்

தருமபுரி: மாநில அளவிலான விளையாட்டு விடுதியில் சேர தோ்வுப் போட்டிகள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கின. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சாா்பில் மாநில அ... மேலும் பார்க்க

ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையத்தில் சோ்க்க அறிவுரை

தருமபுரி: இரண்டு முதல் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் சோ்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்டசெய்திக் க... மேலும் பார்க்க