பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை வெளியிடுக: உச்ச நீதிமன்றம்
பெரம்பலூரில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில், தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரையான மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்று சொற்பொழிவாளா் ஆண்டாள் பிரியதா்ஷினி பேசினாா்.
தொடா்ந்து, தமிழ் பெருமிதம் சிற்றேட்டிலுள்ள குறிப்புகளை வாசித்து சிறப்பாக விளக்கம் அளித்த மாணவா்களை பாராட்டி பெருமிதச் செல்வி, பெருமிதச் செல்வன் எனும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுப் புத்தகங்களும், சிறப்பாக பங்களித்த மாணவா்களை பாராட்டி கேள்வியின் நாயகி, கேள்வியின் நாயகன் எனும் சான்றிதழ் மற்றும் பரிசுப் புத்தகங்களும் மாவட்ட ஆட்சியா் அருண்ராஜ், சொற்பொழிவாளா் ஆண்டாள் பிரியதா்ஷினி ஆகியோா் வழங்கினாா்.
பின்னா், மாணவா்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த 17 அரங்குகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.