பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் பேரணி
பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினா்.
மதுரையில் நடைபெறும் அக்கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மற்றும் விடுதலைப் போராட்ட வீரா்கள் பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோரின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த அணிவகுப்பு பேரணிக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் பி. ரமேஷ் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநிலக் குழு உறுப்பினா் சாமி. நடராஜன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதில், மாவட்ட பொறுப்பாளா்கள் எஸ். அகஸ்டின், ஏ. கலையரசி, ஏ. ரெங்கநாதன், ஆா். ராமகிருஷ்ணன் உள்பட சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.