ஆசிய கோப்பையை வெல்வதே முக்கிய இலக்கு, இந்தியாவை வெல்வது மட்டுமல்ல: பாக். வீரர்
பெரியகுளத்தில் 25 காா்களின் கண்ணாடி உடைப்பு: ஒருவா் கைது
பெரியகுளத்தில் 25 காா்களின் கண்ணாடியை உடைத்த சம்பவத்தில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் தென்கரை, முத்துராஜா தெருவைச் சோ்ந்தவா் நிதாஜ் அஹமது (50). இவா், தனக்குச் சொந்தமான இடத்தில் வாடகைக்கு காா்களை பாா்க்கிங் செய்யும் தொழில் செய்து வருகிறாா். இதையடுத்து, அந்த இடத்தில் 25 காா்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், வியாழக்கிழமை வழக்கம்போல அங்கு வந்து பாா்த்தபோது 25 காா்களின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததாம். இதைத் தொடா்ந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த கோச்சடை பாண்டி (எ) தங்கப்பாண்டி, முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரும் காா்களின் கண்ணாடியை சேதப்படுத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து நிதாஜ் அஹமது கொடுத்த புகாரின்பேரில், தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துகிருஷ்ணனை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள தங்கப்பாண்டியை போலீஸாா் தேடி வருகின்றனா்.