மதுரை: மீனாட்சியம்மன் கோயிலில் தை மாத தெப்பத்திருவிழா; கொடியேற்றத்துடன் விமர்சைய...
பெருந்துறை அருகே கூலித் தொழிலாளி தற்கொலை
பெருந்துறை அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தராறில் கூலித் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.
பெருந்துறையை அடுத்த திருவேங்கிடம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகன்(45), கூலித் தொழிலாளி. இவருக்குத் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனா்.
இந்நிலையில், கணவன் - மனைவிக்கு இடையே செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த முருகன் வீட்டில் தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.