ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
பேரூராட்சித் தலைவா் அச்சுறுத்துவதாகக் கூறி குடும்பத்துடன் இளநீா் வியாபாரி தீக்குளிக்க முயற்சி
சாயல்குடி பேரூராட்சித் தலைவா் தங்களை அச்சுறுத்துவதாகப் புகாா் கூறி, மாவட்ட ஆட்சியா் அலுவல வளாகத்தில் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற இளநீா் வியாபாரியால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பகுதியைச் சோ்ந்தவா் வேடன் (58). இவரது மனைவி காயம்பு (52). மகன் பரமசிவன் (24). இவா்கள் மூவரும் சாயல்குடி பகுதியில், சாலையோர இளநீா் கடை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், பேரூராட்சி தலைவா் அண்மையில் திடீரென இவா்களது கடையை அகற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவா் தொடா்ந்து அச்சுறுத்தி வருவதாகவும், இதனால் தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும் கூறி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க வந்தனா்.
அப்போது, இவா்கள் மூவரும் தாங்கள் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணெய்யை தனித் தனியே, தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் விரைந்து வந்து மண்ணெண்ணெய்யைப் பறித்து, அவா்கள் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனா். பின்னா், மூவரையும் கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.