செய்திகள் :

பேரூர் படித்துறையில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

post image

கோவை பேரூர் படித்துறையில் ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

ஆடி அமாவாசை இந்துக்களுக்கு மிகவும் புனிதமும், சிறப்பான நாளாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை "ஆடி அமாவாசை விரதம்" எனச் சிறப்பு பெறுகின்றது. ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து படையலிட்டு வணங்குவதற்கு உகந்த நாளாகும். பொதுவாக ஒரு வருடத்திற்கு 96 முறை முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு உள்ளது. அப்படி செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு மாதமும் வரக் கூடிய அமாவாசையில் செய்யலாம். அன்று பித்ருலோகத்தில் இருந்து தேடி வரும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பதே சாஸ்திரம் சொல்ல கூடிய விதியாகும்.

வருடத்தில் முக்கியமான மூன்று அமாவாசையில் அதாவது, ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய நாள்களில் திதி தர்ப்பணம் கொடுப்பது நல்ல பலனை தரும். முதலில் வரக்கூடிய அமாவாசை, ஆடி அமாவாசையாகும். ஆகவே ஆடி அமாவாசை சிறப்பு பெறுகிறது. கோவை பேரூரில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் புரோகிதர்களை கொண்டு முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேரூர் பட்டீஸ்வரர் கோயில் படித்துறையில் நல்லறம் அறக்கட்டளை சார்பில் ரூ. 15 கோடி மதிப்பில் தர்ப்பண மண்டபம் கட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, கட்டி முடிக்கப்பட்ட தர்ப்பண மண்டபம் அரசிடம் ஒப்படைத்தனர். கடந்த சில ஆண்டுகளாக நொய்யல் ஆற்றங்கரை ஓரம் அருகே உள்ள தோட்டத்தில் தர்ப்பணம் செய்து வந்த நிலையில், தற்பொழுது புதிய தர்ப்பணம் மண்டபத்தில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். அதன்படி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நொய்யல் ஆற்றங்கரையில் குவியத் தொடங்கினர்.

நேரம் ஆக, ஆக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆற்றங்கரையில் ஓரத்தில் உள்ள புதிய தர்ப்பணம் மண்டபத்தில் தயார் நிலையில் இருந்த புரோகிதர்களை கொண்டு பக்தர்கள், முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர். வாழை இலையில் தர்ப்பை புல், காய்கறி, அரிசி, எள், சாதம் உள்ளிட்டவற்றைகளை படைத்து பூஜை செய்தனர். பின்னர் அவற்றை எடுத்துச் சென்று ஆற்றில் போட்டு மூதாதையரை வணங்கினர்.

தொடர்ந்து இலையில் சூடம் ஏற்றி ஆற்றில் விட்டு வழிபட்டனர்.அதன்பின் ஆற்றங்கரையில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று விநாயகரையும், சப்த கன்னியரையும் வணங்கினர். அங்கு இருந்து பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதனால் நொய்யல் ஆற்றங்கரை மற்றும் பேரூர் கோயில் முன்பு இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்தது. ஏராளமான வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு உள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக நொய்யல் ஆற்றங்கரைக்கு செல்கின்ற வாகனங்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் சாலையின் ஓரத்தில் வாகனங்களை விற்பது மக்கள் நிறுத்திச் செல்கின்றனர். மேலும் கூட்டம் அலைமோதுவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே: டீசர் அறிவிப்பு!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐகே படத்தின் டீசர் வெளியீடு தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர்பிரதீப் ரங்கநாதனைவைத்து புதிய படத்தைஇயக்கி வருகிறார்.இந்தப் படத்திற்கு, லவ்... மேலும் பார்க்க

சிவகார்த்திகேயனின் ஹவுஸ் மேட்ஸ்: மின்னலி பாடலின் புரோமோ!

ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தின் மின்னலி பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ் வழங்கும் ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் கவனம் ஈர்த்தது.இயக்குநர் ராஜவேல் இயக்கத... மேலும் பார்க்க

பிறந்த நாள் கொண்டாடிய பிரதீப் ரங்கநாதன்: டூட் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் பிறந்த நாள் கொண்டாட்டம் புகைப்படங்களை டூட் படக்குழு பகிர்ந்துள்ளது. அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கிவரும் டூட் படத்தில் நாயகனாக நடிகர் பிரதீப் ரங்கநாதனும் நாயகியாக மமிதா... மேலும் பார்க்க

ரசிகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நெய்மர்: கோல் அடித்ததாக நினைத்து கொண்டாட்டம்!

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் ரசிகருடன் சண்டையிட்டது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது. பார்சிலோனா அணிக்காக விளையாடி புகழ்பெற்றவர் நெய்மர். பின்னர், பிஎஸ்ஜி, அல் ஹிலால் அணிக்காக விளையாடி... மேலும் பார்க்க