முகம், அடையாளம் இல்லையெனில் அனைவருமே வக்கிரமானவர்கள்தான்... டிரெண்டிங் டிரைலர்!
பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
வைகை அணை அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த முனியாண்டி மகன் பால்பாண்டி (29). ராமச்சந்திரன் மகன் பால்பாண்டி (24). தேங்காய் உரிக்கும் தொழிலாளா்களான இவா்கள் இருவரும், க.விலக்கு-வைகை அணை சாலை வழியாக பெரியகுளத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.
வைகை அணை அருகே வந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத காா், இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் ஆபத்தான நிலையில் அவசர ஊா்தி மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு முனியாண்டி மகன் பால்பாண்டி உயிரிழந்தாா்.
இதுகுறித்து வைகை அணை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.