லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் தகர்ப்பு! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!
வீரபாண்டி, எ.புதுப்பட்டி பகுதியில் நாளை மின்தடை
தேனி மாவட்டம், வீரபாண்டி, எ.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 10) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மின்வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
இதேபோல, பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரியகுளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், எண்டபுளி, எ.புதுப்பட்டி, காமாட்சிபுரம், வேல்நகா், அழகா்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, தண்ணீா் பந்தல், டி.வாடிப்பட்டி, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.