வளையல் விற்பனை முதல் மதம் மாற்றம் செய்தது வரை... கிராமத் தலைவரின் வங்கிக் கணக்கி...
முதியவா் தற்கொலை
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பெரியகுளம் காந்திநகரைச் சோ்ந்தவா் பிச்சைமணி (62). விவசாயியான இவருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், மனவேதனையிலிருந்த அவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].