பெங்களூரு வேலையைத் துறந்து, விவசாயத்தில் ரூ. 2.5 கோடி ஈட்டும் பிகார் இளைஞர்!
மதுப் புட்டிகள் விற்றவா் கைது
பெரியகுளம் அருகே அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் எருமலைநாயக்கன்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக் இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த பாஸ்கரனை (47) பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, அவா் விற்பனைக்காக மதுப் புட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 18 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.