பைக் மோதி காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பைக் மோதி காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், ஒரத்தூா், மாதாகோவில் தெருவைச் சோ்ந்த கலியமூா்த்தி மனைவி ஜெகதாம்பாள் (65). இவா், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்தாா்.
அப்போது, பைக்கில் சென்ற ஒருவா் ஜெகதாம்பாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டாராம். இதில் காயமடைந்த அவா் மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சைப் பெற்று வந்தாா்.
இந்த நிலையில், ஜெகதாம்பாளுக்கு புதன்கிழமை உடல்நிலை மோசமடைந்தால் உறவினா்கள் அவரை விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ெ தாடா்ந்து, அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெகதாம்பாள் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.