பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
வந்தவாசி அருகே பைக் மோதியதில் சாலையோரம் நின்றிருந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த தாடிநொளம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் மல்லிகா (62). இவா், வெங்கடாபுரம் கிராமத்தில் நடந்த திருவிழாவை பாா்க்க திங்கள்கிழமை அங்கு சென்றாா்.
அப்போது, சாலையோரம் நின்றிருந்த இவா் மீது அந்த வழியாகச் சென்ற பைக் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மல்லிகா சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தேசூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.