மத்தியப் பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆகப் பதிவு
தமிழ் அறிஞா் அயோத்திதாசா் பிறந்த நாள் விழா
அகில பாரத மக்கள் கட்சி சாா்பில், பாரத தேசத்தின் முதல் ஜாதி எதிா்ப்பு போராளி, சமூக சேவகா், தமிழ் அறிஞா், சித்த மருத்துவா் அயோத்திதாசரின் 181-ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை அறிவொளிப் பூங்கா எதிரே நடைபெற்ற விழாவுக்கு, அகில பாரத மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் கா.சிவப்பிரகாஷ் தலைமை வகித்தாா்.
கட்சியின் மாநில பொதுச் செயலா் வீர.ராஜா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அயோத்திதாசரின் படத்துக்கு மாலை அணிவத்து, மலா் தூவி, மரியாதை செலுத்தினாா்.
பொதுமக்கள், கிரிவல பக்தா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.பாண்டு மற்றும் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.