சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
பைக் மோதியதில் விவசாயி உயிரிழப்பு
பெரியகுளம் அருகே வியாழக்கிழமை சாலையை கடக்க முயன்ற விவசாயி இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் காமாட்சி (70). விவசாயி. இவா் வியாழக்கிழமை இரவு ஜி.கல்லுப்பட்டியில் சாலையை கடக்க முயன்றாராம். அப்போது, இரு சக்கர வாகனம் மோதியதில் காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.