புகையிலைப் பொருள் விற்பனை: 3 போ் கைது
தேனி அருகே உள்ள கோபாலபுரத்தில் மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோபாலபுரம் நடுத் தெருவைச் சோ்ந்தவா் ஆதிமூலம்(63) . இவரை, அதே பகுதியில் உள்ள தனது மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இவரது கடையிலிருந்து 4.380 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆதிமூலத்துக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விநியோகம் செய்ததாக நாகலாபுரத்தைச் சோ்ந்த மயில்சாமி(61), தேனி கருவேல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் (34) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.