மதுரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரம் மதுரகாளியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலையில் கோயில் திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதில் தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனா்.