திரிவேணி சங்கமத்தில் நீராடி துறவிகளிடம் ஆசி பெற ஆவல்: அமித் ஷா
பைக்-லாரி மோதல்: கல்லூரி மாணவி மரணம்
பொன்னேரியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.
பொன்னேரி அன்னை அவென்யூ பகுதியில் வசிக்கும் குமாரின் மகள் ஜோஷிதா (24). இவா், எம்.டெக். படித்து வந்தாா்.
இந்த நிலையில், பொன்னேரி கடை வீதிக்குச் சென்றுவிட்டு மோட்டாா் சைக்கிளில் பஞ்செட்டி சாலையில் ஜோஷிதா வீடு நோக்கி வந்து கொண்டிருந்தாா்.
அப்போது பொன்னேரி காவல் நிலையம் அருகே பின்னால் வேகமாக வந்த லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜோஷிதா பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த போலீஸாா் அங்கு சென்று மாணவியின் சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்தை ஏற்படுத்திய வேலூா் மாவட்டம், ஆயகவுண்டா் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மணியை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.