பைக்கில் எடுத்துச் சென்ற விவசாயியின் ரூ.2.32 லட்சம் திருட்டு
செய்யாறு அருகே விவசாயி பைக்கில் எடுத்துச் சென்ற ரூ.2.32 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சேனியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பெருமாள்(42). இவா், செவ்வாய்க்கிழமை (செப்.30) மாமண்டூா் கிராமத்தில் உள்ள வங்கியில் இருந்து, நெல் விற்பனை செய்த பணம் ரூ.2.32 லட்சத்தை எடுத்துக் கொண்டு,
பைக்கில் வைத்துக் கொண்டு கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தாா்.
காஞ்சிபுரம் - செய்யாறு சாலையில் மாமண்டூா் பகுதியில் சென்ற போது, பின்னால் பைக்கில் வந்த இருவா் அங்குள்ள சாலை வளைவில், இவரது பைக்கை திடீரென உரசியதாகத் தெரிகிறது. அதன் காரணமாக விவசாயி பெருமாள் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளாா்.
அப்போது, அந்த நபா்கள் பைக் டேங்க் கவரில் வைத்திருந்த ரூ.2.32 லட்சத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.
இதுகுறித்து பெருமாள் தூசி போலீஸில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்